News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

About




2007ல் தாவர தகவல் மையம் துவங்கப்பட்டது

நோக்கம்

இந்திய தாவரங்களை பட்டியல் இடுவது.

தமிழ் நாட்டு தாவரங்களை பட்டியல் இடுவது.

சித்த மருத்துவ பயன்பாட்டில்உள்ள தாவரங்களை சரியாக அடையாலம் காட்டுவது.

தமிழ் புத்தகங்கள் (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் நூல்கள், இலக்கணம், நிகண்டு, அகராதி) பயன்படுத்திய தாவரங்களை சரியாக அடையாளம் காட்டுவது.

'இதுவரை செய்தப்பணிகள்

தமிழ் நாட்டு தாவரங்களில் சுமார் 667 தாவரங்கள் மட்டுமே தமிழ் பெயர் உள்ளது.
இந்திய பயன்பாட்டுத் தாவரங்கள் - 11226 கண்டறியப்பட்டுள்ளது

தமிழ் நாட்டு தாவரங்கள் - 5767 கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டு தாவரங்களில் சுமார் -667 தாவரங்களுக்கு மட்டுமே தமிழ் பெயர் உள்ளது.

667 தாவரங்களுக்கு தமிழில் (நூல்களில்) - 90,000 பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளது.

தாவரத்திற்கான தமிழ் பெயர்கள் நூல்களில் - 1880 கண்டறியப்பட்டுள்ளது.

தாவரவியல் பெயர் அறியப்படாத தமிழ் பெயர்கள் 1133.

மூங்கில் வகை-2 ,கொடி வகை-23 ,படர் கொடி-92 ,புல் வகை -217,

பூண்டு வகை-280 ,செடி வகை -227 ,மர வகை -292

பெயர் குழப்பங்களுக்கான அறியப்பட்ட காரணம்

தொகுத்த வழக்கியல் பெயர்களை தமிழ் தெரியாதவர்கள் தமிழை ஆங்கில வார்த்தையாக பயன்படுத்தியது.

தமிழை ஆங்கிலத்தில் அச்சு கோர்த்து தொகுத்தது.

தொகுத்ததை தமிழில் அச்சிடாதது.

ஆங்கிலத்தில் அச்சடித்ததில் உள்ள உச்சரிப்பு குறிகளை சரியாக பயன்படுத்தாதது.

பிற்கால தொகுப்பாளர்கள் உச்சரிப்பு குறிகளை விடுத்து ஆங்கில வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டது.

அண்டை மாநில மொழியை பயன்படுத்திய தமிழர்கள் அந்த மாநில மொழி சொற்களை தமிழாக்கியது.

நாட்டு மருத்துவத்தில் தாவரங்களின் பயன்பாட்டை வைத்து பெயர் சூட்டியது (வழக்கத்தில் உள்ளது)

சித்த மருத்துவத்தில் மற்றவர்களுக்கு தெரியகூடாத வகையில் மறை பொருளாக பெயரை மாற்றி பயன்படுத்தியது.

உதாரணம் - இருகுரங்கின் கை = முசுமுசுக்கை -முசு என்றால்குரங்கு

இலக்கிய அறிவு, மருத்துவ அறிவு, தாவரவியல் அறிவு ஒன்று சேராமல் வழ்கத்தில் உள்ள தமிழ் பெயரை அறிவியல் பெயராக அடையாளம் காட்டியது.

அவரவர் அவர்களது கால அறிவை அடிப்படையாக கொண்டு அகராதி தொகுத்து வெளியிட்டது.

சித்த மருத்துவத்தில் பெயர்கள் பேச்சுவழக்கில் காலப்போக்கில் மருவி சிதைக்கப்பட்டது.

'நடைமுறைபடுத்தப்போவது 

தாவரவியல் குறிச்சொல் (Terms) தமிழில் வழங்குவது.

பெயர்குழப்பங்களைபோக்குவதற்கு பிறவி(Genus), பெயர்வழி (Species) இணைந்த இரைட்டைசொற்களை தாவர பெயராக வழங்குவது.

உதாரணம்---சரப்பூங் கொன்றை (Cassia fistula),வில்வ கூவிளம் (Aegle marmelos)

தமிழ் நூல்களில் உள்ள தாவர பெயர்களை வள்ளுனர்களை ஒருங்கிணைத்து சரியான தமிழ் பெயர் தேர்வு செய்வது.

தாவரவியல் படிக்காதவர்களும் தாவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அடையாளம் கண்டறிவது.
ஆதாரம் இல்லை என சித்த மருத்துவத்தை புறக்கனிப்பதை தடுப்பது.


அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

சித்த மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

ஆயுர்வேதத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

நாட்டு மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்

யுனானி மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

ஹோமியோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்

ஹோமியோபதி மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.

இதிகாசத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.

காப்பியங்களில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.

தொல்காப்பியத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.
சங்க இலக்கியத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.

பக்தி இலக்கியத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.

கோயில் தல மரங்களாக பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.

வான சாஸ்த்திரங்களில் தொடர்புபடுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.

இந்தப் பணியில் முதற்கட்டமாக வாணசாஸ்திர தொடர்புபடுத்தப்பட்ட தாவரங்களை தாவர விளக்கங்களுடன் ஒளிப்படத்துடன்

1-7-2011 ல் -பிரபஞ்சமும் தாவரங்களும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. 08.07.2012 ல் - கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் வெளியிடப்பட்டது.

Plant Info Centre is a centre with a database of around 11,122 species in India and 5676 in Tamilnadu alone, which is first of its kind. As only 1260 plants out of 5676 plants has Tamil name, the centre is under the process of naming the remaining plants in Tamil.

No comments:

Post a Comment