News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Friday 17 March 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை

'பனைமரம்நூலின் திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டதுசிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும்மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பனை

Wednesday 11 January 2017

பனைமரம் நூல் வெளியீட்டு விழா






பனைமரம் - panai maram
மொழி - தமிழ்
ISBN NUMBER - 9788192377193
மொத்த பக்கம் - 756
விலை - ரூ. 800
வெளியீட்டு தேதி - 21-12-16
எடை - 900 கிராம்
நூல் அளவு  அகலம் 14 செமீநீளம் 22 செமீமையம்: 3.5 செமீ


நூல் வெளியீடு
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்கள் வெளியிட
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உடன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்,
பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக இயக்குநர்,
 பேராசிரியர் டாக்டர் அ. பாலு,
சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர்,
முனைவர் பால. இரமணி இ.ஒ.ப,
கவிஞரேறு தமிழ்த்திரு கி. தனவேல் இ.ஆ.ப,
நூல் ஆசிரியர் டாக்டர் இரா.பஞ்சவர்ணம் மற்றும்
சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன்.

பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நோக்க உரை

பேராசிரியர் டாக்டர் பொற்கோ தலைமை உரை


கவிஞரேறு தமித்திரு கி. தனவேல் இ.ஆ.ப நூல் அறிமுக உரை

இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் நூல் வெளியீட்டு உரை

சென்னை தொலைக்காட்சி இயக்குநர், முனைவர் பால. இரமணி சிறப்புரை


நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன் சிறப்புரை

மெரின வளாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அ. பாலு சிறப்புரை

நூல் ஆசிரியர் டாக்டர் இரா. பஞ்சவர்ணம் எற்புரை



இந்நூல் - ஓர் அறிமுகம்
நூல்
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்’ என்னும் திட்டத்தின் அடிப்படையில்இதுகாறும் அரசமரம்ஜ’, ‘சிறுதானியத் தாவரங்கள்’ ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளனஅந்த வரிசையில்  ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் – பனைமரம்’ என்ற இந்நூல் இப்போது வெளியிடப்படுகிறது.

களஞ்சியம்
பனைமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும்  உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.
பெயர்கள்
இந்நூலின்கண் பனைமரத்தின் வகைப்பாட்டியல்தாவர விளக்கம்இதர வகைப்பாடு,ஆங்கிலப்பெயர்கள்தமிழ்ப்பெயர்கள்தாவரவியற் பெயர்கள்வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள்பிறமொழிப்பெயர்கள்இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள்,நிகண்டுகள்சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள்மருத்துவப் பயன்பாடுகள்போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டுநிரல்படத் தரப்பட்டுள்ளன.
பனைமரப் பாகங்களின் பயன்பாடுகள்
பனை ஓலைமடல்மட்டைநார் (சோற்றுப்பகுதி நீக்கியது), பாளைபூந்துணர்ச்சாறுகள்,காடிபதநீர்பனங்காய்நுங்குஇதக்கை (முதிர்ந்த நுங்கு), பனம்பழம்பனங்கொட்டை,பனங்கிழங்குபன்னாடைபனையின் தண்டுப்பகுதி (வைரம்), மரத்தின் பயன்பாடுமரச்சோறு,பனையின் வேர்ப்பகுதிபனைநீர்கொட்டுப்பனை (காய்ந்த பனை மரம்), பனை புல்லுருவி.பனையில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றம் வேதிப்பொருட்கள்பனங்கள் எடுக்கப் பயன்படுத்திய சிறப்புக் கருவிகள் - போன்ற விவரங்கள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மேற்கோள்
தொல்காப்பியம்சங்க இலக்கியம்பதினெண்கீழ்க்கணக்குஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறுங்காப்பியங்கள்பக்தி இலக்கியங்கள்புராணங்கள்வேதங்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள்விடுகதைகள்நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு,காதல்தொழில்ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல்மருத்துவப் பாடல்கள்.
ஈழச்செய்திகள்
ஈழச் செய்திகளான புராணம்பழமொழிகள்நாடகப்பாடல்கள்தாலவிலாசம் தமிழ் ஆங்கில பாடல்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள பகுதிகள் தொகுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளன.
ஆன்மீகம்
பனைமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள்கடவுள் பெயரோடு பனைமரம் இணைந்துள்ள மூர்த்திகள்அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள்பனை மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள்பனையின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற பிற தாவரங்கள்முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் -போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மருத்துவம்
பனையின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளனஅனுபானம்,பனையைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள்பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம்சித்தாஆயுர்வேதம்ஹோமியோபதி,யுனாநிமருந்துவ உணவு - போன்ற மருத்துவ முறைகளில் பனைமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.
மனிதர்க்கான மருத்துவம் மட்டுமின்றிபறவை - விலங்கின மருத்துவத்திலும் பனையின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
அகத்தியர் வைத்தியச் சதகம்தேரையர் மகா கரிசல்தேரையர் வைத்தியம் 1000,பிரம்மமுனி வைத்திய விளக்கம்குணப்பாடம்போகர் கருக்கிடை நிகண்டு 500, யூகிமுனி வைத்தியக் காவியம்பிரம்மமுனி மருத்துவ விளக்கம்அற்புதச் சிந்தாமணிஅகத்தியர் வைத்தியக் காவியம்அகத்தியர் வைத்தியச் சிந்தாமணிஅகத்தியர் ஆயுர்வேதம் 1200, அகத்தியர் ஆயுர்வேதம்1500, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்சித்தமருத்துவத் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்,பதார்த்த குணம்வள்ளலார்விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பனை பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவும் பிறவும்
நேரடி உணவாகும் பனையின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளனபனையிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருள்களும் சுட்டப்பட்டுள்ளனமனிதர்களுக்கே மட்டுமல்லாமல்,விலங்கினம்கால்நடைபறவையினம்பூச்சி புழுவினத்திற்கெல்லாம் பனைபடுபொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளனதேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமாவும் தயாரிக்கப்பட்டு,  அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளனதேவையான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் பாகங்கள் அனைத்தும் வழுவழு தாள்களில்கண்ணைக் கவரும் வண்ணங்களில்எளிதாகப் பாகங்களை அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பெற்று இணைக்கப்பட்டுள்ளனசங்க இலக்கிய ஒப்பீடுகளும் காட்டப்பட்டுள்ளன.
மொத்தத்தில்
தாவரப்பெயர்கள்மேற்கோள் இலக்கியங்கள்ஆன்மீக்க குறிப்புகள்மருத்துவப்பயன்கள்,உணவுப்பயன்பாடுகள்வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பனைமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.