News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Friday, 24 May 2013

தாவரத் தகவல்மையம்

நம் நாட்டின் இயற்கை வளங்களில்ஒன்றான தாவரங்களை மக்கள் உணவு, விலங்கின உணவு, தழை உணவு, தழைஉரம், மருந்து, அழகு, அலங்காரங்களுக்குப்பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்குச்சரியான பயன்பாட்டையும் பயன்பாட்டின் நம்பகத் தன்மையையும் நாம் நிரூபிக்கமுடியாத நிலை உள்ளது. சரியானத் தாவரங்களை அடையாளம் தெரிந்துகொள்ள வழிவகை இல்லை.

ஓலைச்சுவடிகளிலும், புத்தகங்களிலும் உள்ள தகவல் குறிப்புகள் அழியாமல் புதுப்பிக்கப்படும் பணியில் முடிவுறாத நிலையில்உள்ளோம்.


மக்களுக்குத் தாவரங்களைப் பற்றிய தகவல்கள், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவும், தாவரவியல் அறியாதவர்களையும் சென்றடையும்வகையிலும் இருத்தல்வேண்டும். ஆனால்
குழப்பமான நிலை நீடிக்கின்றது.


சங்க இலக்கியங்களிலும் மருத்துவ நூல்களிலும் பயன்படுத்தும் தாவரங்களின் பெயர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.


பெயர்க்குழப்பத்திற்கான காரணங்கள்


சங்க இலக்கியங்களில் அடையாளம் காட்டப்பட்ட தாவரயியல் விளக்கங்களுடன்அறிமுகப்படுத்தப்பட்ட பெயர்கள் இன்று வழக்கத்தில் இல்லை.
உம் :செங்காந்தள், சுடர்பூந்தோன்றி, பொரிப்பூங் புங்கு, சரப்பூங்கொன்றை,
              விரிமலர்ஆவிரை


நாட்டுமருத்துவத்தில்,தாவரங்களின்பயன்பாட்டைவைத்துப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.


உம்: வாதநாராயணன், பல்வலிப்பூண்டு, முடக்கற்றான், நேத்திரப்பூண்டு,   நாய்க்கடிச்சான் பட்டை, வசநாபி (உழிஞையைமுடக்கற்றான் என தவறாக இனங்கண்டுள்ளனர். ஆனால்
உழிஞைவேறு, முடக்கற்றான்வேறு என்று அறிதல் வேண்டும்)


வழக்கத்தில் உள்ள சித்தமருத்துவ ப்பெயர்கள் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாத வகையில்


மறை பொருளாகப் பெயர் மாற்றிப் பயன் படுத்தப்பட்டுள்ளது.


உம்: இருகுரங்கின்கை = முசுமுசுக்கை - முசு என்றால்குரங்கு, முசு, முசு என்றால் இரு குரங்கு என்றும் முசு முசுக்கையின் கடைசி எழுத்தை இணைத்து இருகுரங்கின் கை எனவும்,


திருடி = கள்ளி - கள்ளியைத் திருடி என்றும் (திருடுபவர்களைக் கள்ளி என்றுகூறுவர்)


தோற்றத்தின்அடிப்படையிலும்


உம்: ஏழிலைப்பாலை, ஓரிலை, மூவிலை, ஓரிதழ்த்தாமரை, அழுகண்ணி,
தொழுகண்ணி, தேள்கொடுக்கு, கவிழ்த்தும்பை, ஓரிலைத்தாமரை எனவும்,
பாமரத்தனமாக பால்வருகின்ற அனைத்துச் செடிகளையும் பாலைஎன்றும், கள்ளி  என்றும் வழங்கியது.

இலக்கிய அறிவும், மருத்துவ அறிவும், தாவரவியல் அறிவும் ஒன்று சேராமல் வழக்கத்தில்
உள்ளதமிழ்ப்பெயரை அறிவியல்பெயராகஅடையாளம் காட்டியது. அவரவர்

அவரவர்களது கால அனுபவ அறிவை அடிப்படையாகக்கொண்டு அகராதி தொகுத்து வெளியிட்டது. சித்தமருத்துவத்தில் பெயர்கள் பேச்சுவழக்கில் காலப்போக்கில் மருவி சிதைக்கப்பட்டன.

தாவரங்களுக்கான தமிழ்ப்பெயர்களை 18, 19 ஆம்நூற்றாண்டுகளில்தொகுத்து வழங்கியதில்பெயர்களைத் தமிழ்தெரியாதவர்கள்தமிழ்வார்த்தையைஆங்கில வார்த்தையாகஆங்கிலத்திலேயேஎழுதிப்பயன்படுத்தியது.

தொகுத்ததை தமிழில் அச்சிடாதது; தமிழைஆங்கிலவார்த்தையாகஉச்சரிப்புக்குறியுடன் அச்சுக்கோர்த்துத்தொகுத்தது; ஆங்கிலத்தில்அச்சடித்ததில்உள்ள உச்சரிப்புக்குறிகளைச் சரியாகப்பயன்படுத்தாதது.

பிற்காலத்தொகுப்பாளர்கள்உச்சரிப்புக்குறிகளை விடுத்துஆங்கிலவார்த்தையை மட்டும்எடுத்துதமிழாக்கம்செய்தது.

அண்டைமாநிலமொழியைப்பயன்படுத்தியதமிழர்கள்அந்தமாநிலமொழிச்சொற்களைத் தமிழ்மொழிச்சொற்களாகப் (பெயர்களாக) பயன்படுத்தியது.

நம்நாட்டுத்தாவரங்களை உலகிற்குஅடையாளம் காட்ட நினைத்துஇணையான இலத்தீன் மொழிப்பெயர்களை ஆங்கிலதாவரவியல்பெயராக்கும்பணியில்ஈடுபட்டவர்கள்அவரவர் காலத்தில்வழங்கியவேறு (ஏற்றுக்கொள்ளாத) பெயர்களைச் சூட்டியது. இக்காலத்தில் தாவரவியல்வல்லுநர்கள்தாவரவியல் விதிகளுக்கேற்ப (பூக்கள் நிறம், இலையின்வடிவம் இவைகளை வைத்துப்பெயர்களை மாற்றுவதைஏற்றுக்கொள்ளாதது) மாற்றப்படும் பெயர்களை ஏற்காமல்தொடர்ந்துபழையபெயர்களையேபயன்படுத்தியது. இத்தகைய குழப்பமான நிலைகளில்இருந்துதெளிவுபெற வேண்டும்.
            
             “சொல்லப்பட்டன எல்லாமாண்பும்
             மறுதலைஆயினும்மற்று அது சிதைவே.”      - 1605 - மரபியல்

 “சிதைவுஇல்என்பமுதல்வன்கண்ணே.”  - 16065 - மரபியல்
           
            “முதல் வழி ஆயினும்யாப்பினுள் சிதையும்
        வல்லோன் புணராவாரம்போன்றே.”     - 16075 - மரபியல்

வழி நூல்கள் (உரைநூல்கள்),‘கற்றறிந்தத் திறமை உள்ளவர்கள் பாடாதப்பாடல்களில்குற்றம்குறை காணப்படுவதுபோல்’குற்றம், குறைகள் நிறைந்திருக்கும். என்ற தொல்காப்பியர்கூற்றின்படிமுதல்நூல், வழி நூல்களால் சிதைவதற்குவாய்ப்புண்டு.

கற்றறி வாளர் கருதிய காலத்து
              கற்றறி வாளர் கருத்திலோர்கண்ணுண்டு
  கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
 கற்றறி காட்டக்கயல்உள்வாக்குமே        
                         - 291-2- திருமந்திரம் - திருமூலர்

என்ற தொல்காப்பிர் திருமூலர்வாக்குகளைஏற்று, குற்றங் குறைகளைப் போக்கி இத்தகைய குழப்பத்தில்இருந்து விடுபட ஒருங்கிணைந்ததாவரத்தகவல்களை நடைமுறைக்குக் கொண்டுவரவும், தாவரத்தகவல்களைத் தொகுத்து வழங்குதலைக் குறிக்கோளாகவும் கொண்டு தாவரத் தகவல்மையம் செயல்படுகின்றது.
      
தகவல்களை ஒருங்கிணைத்து ஆங்கிலத்தாவரவியல்(Terms)உரிச்சொல்,பெயருக்கு இணையாகத் தாவரவியல் உரிச்சொல், தமிழில் வழங்குதல்.
பெயர்க்குழப்பங்களைப் போக்குவதற்குப் பிறவிப் (Genus) பெயர்வழி (Species epithet) இணைந்த இரட்டைச்சொற்களைத் தாவரப்பெயராக வழங்குவது.
உம்: சரப்பூங்கொன்றை (Cassia fistula)
வில்வக் கூவிளம் (Aegle marmelos)
சூடர்பூந்தோன்றி (Firmiana colorata)
   
சங்க இலக்கிய நூல்களிலும் இதர தமிழ் நூல்களில் உள்ள தாவரப் பெயர்களையும் தொகுத்துக் கொண்டு வல்லுநர்களை ஒருங்கிணைத்துச் சரியான தமிழ்ப் பெயர்களைத் தேர்வுசெய்வது.

தாவரவியல் படிக்காதவர்களும் தாவரத்தைப்பார்த்துத் தெரிந்து கொள்ளும்வகையில் சங்க இலக்கியகாலத்தில்கூறியுள்ளது போல் தாவரத்தின் புறத்தோற்றத்தின்மூலம் அடையாளம் கண்டறியச்செய்வது.

மருத்துவம் அறிந்தவர்கள் தாவரங்களை அடையாளம் தெரிந்துகொள்வது, இலக்கியவாதிகள்இலக்கியங்களில் தாவரங்களை அடையாளம் காட்டியதன்நுட்பத்தை அறியச்செய்வது.
பக்தி இலக்கியங்களி ல்ஈடுபாடு உள்ளவர்களின் இறை உணர்வைஇயற்கையுடன் இணைப்பது.

கோயில்களின் தலமரங்களின் (தல விருட்சங்களின்) முக்கியத்துவத்தை உணரச் செய்வது; வான சாஸ்திர, ஜோதிடஈடுபாடுள்ளவர்களை இயற்கையுடன்இணையச்செய்வது. சங்கஇலக்கியம், பக்தி இலக்கியங்களில் பயன்படுத்திய தாவரங்களைப் பட்டியலிடுதல். கோயில் தல மரங்களாகப் பயன்படுத்தியத் தாவரங்களை ஊரின் பெயருடன்பட்டியலிடுதல், எனப் பல்வேறு பொறுப்புகளைச் செயலாக்கும் பணியில், முதல்கட்டமாக இந்தப்பணியில் மரபு, நம்பிக்கை அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டவான சாஸ்திரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு இறைவுணர்வுடன் இயற்கையை இணைக்க“பிரபஞ்சமும் தாவரங்களும்”என்ற நூல் தாவரவிளங்கள் மற்றும்ஒளிப்படத்துடன் 01-07-2011 அன்று நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் சிறந்த படைப்பாகவும், சிறந்த ஆசிரியர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

அடுத்தப் பணியாக சங்கஇலக்கியத் தாவரங்களைத் தொகுக்கும்பணியில்முதற்கட்டமாக குறிஞ்சிப்பாட்டில், கபிலரால் தொகுத்துவழங்கப்பட்ட 112 தாவரங்களை தாவரவியல விளங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன்“கபிலரின்குறிஞ்சிப்பாட்டுத்தாவரங்கள்”என்ற தலைப்பில் 8.7.2012 அன்று நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இதைமுதன்மையாகவெளிப்படுத்தியதற்கான காரணம்சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்டதாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் ஒரே பாடலில் (261 வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களைப் பயன்படுத்தியதுடன் 33 தாவரங்களை அடைமொழியுடன்பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்குமுன்னுரிமைஅளிக்கப்பட்டது.


இவ்வாறு பண்டையத் தமிழ்நூல்களில் கொட்டிக் கிடக்கின்ற தாவர சம்பந்தமான தகவல்களைத் தொகுத்துவழங்க வேண்டும் என்ற அடிப்படைக் குறிக்கோள்களை நிறை வேற்றும்பணியில் அடுத்தப்பணியாகக்"தொல்காப்பியத் தாவரங்கள்"என்ற நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சங்கஇலக்கிய, சங்ககாலஇலக்கிய, பக்தி இலக்கியத்தாவரங்கள், மருத்துவப்பயன்பாட்டுத்தாவரங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில்உள்ள தாவரங்கள், கோயில்தலமரங்கள் என நூல்கள்வெளியிடும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.
       
இலக்கிய இலக்கணச்சந்தையில்அவரவர்கள்தாங்கள் விரும்பும்பொருளைத் தேடி அலைவதுபோல்தொல்காப்பியச்சந்தையில்தேவையானவைகளைத் தவிர்த்து சிலர் பிராமணத்தையும், சிலர் சமணத்தையும், சிலர் எழுத்துமுரண்பாடுகளையும், சிலர் சொல் முரண்பாடுகளையும் தேவையற்றவைகளை ஆய்ந்துவருவதில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளனர். வடசொல், திரி சொல்பயன்பாட்டினை தொல்காப்பியர் மறுக்கவில்லை, மறுப்பவர்கள் தொல்காப்பியத்தை உதாரணம் காட்டுவதில் பொருள் இல்லை என உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும், தொடர்ந்து விளக்கமளித்துவருகின்றனர். இந்தக் கருத்திற்கு உரிய ஆதாரம் உள்ளதாஎன்பதையும், தற்காலத்திற்கு தேவைதானா என்பதையும் உறுதிசெய்து கொள்வது நமது கடமையாகும்,

இவை எதிலும் உள்நுழையாமல்,தொல்காப்பியர் பயன்படுத்திய தாவரங்களின் பெயர்ப்பயன் பாட்டை எடுத்துக்கொண்டு தொல்காப்பியத்தில் காணப்படும் தாவரங்களைப் பட்டியலிட்டு, அடையாளம் காணும் பணியைமட்டும் தேர்வுசெய்துள்ளோம்.
தொல்காப்பியத் தாவரங்கள்


இரா.பஞ்சவர்ணம்
தாவரத்தகவல்மையம்,
பண்ருட்டி.