News

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

Friday 24 July 2015

திருமூலர்



திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சித்த மருத்துவத் தொகைப் பெயர்களாக வழங்கப்படும்.
காயம் இரண்டு
வெங்காயம் (உள்ளி)பெருங்காயம்இரண்டையும் காயம் இரண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பஞ்சகாயம்
உள்ளிசுக்குதிப்பிலிபெருங்காயம்மிளகு இவற்றைப் பஞ்சகாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐங்காயம்
சுக்குமிளகுதிப்பிலிஉள்ளிகாயம் ஆகிய இவைகளை ஐங்காயம் என்று அந்தந்த தொகைப் பெயர்களிளேயே குறிப்பிடுகின்றார்.
மிளகுநெல்லிமஞ்சள்வேம்பு இவற்றின் மருத்துவப் பயன்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.
மேலும்பூசைக்குரிய மலராக தாமரைநீலோற்பலம்செங்கழுநீர்அழகிய கருநெய்தல்,மணம் விரியும் பூகமும்பூ மாதவிமந்தாரம்தும்பைமகிழம்பூசுரபுன்னைமல்லிகை,சண்பகம்பாதிரிசெவ்வந்தி ஆகிய பதினான்கு வகையான நறுமணமிக்கப் பூக்களை வழிப்பாட்டிற்குரியத் தாவரங்களாகப் பட்டியலிட்டிருக்கின்றார். மேலும் நந்தி வழிபாட்டிற்கு நறவ மலரை குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மிகப் பயன்பாட்டில் ஆலம்கொன்றைபலாசுவெண் நாவல்வில்வம் ஆகிய தாவரங்களும் மந்திரங்கள் எழுதும் பலகையாகவும்ஓலையை வைத்து எழுதும் பலகையாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பே இல்லாமல் ஞானத்திற்குக் கத்தரியையும்உறுதிப்பாட்டிற்குப் பாகற் காயையும்,தத்துவ ஆராய்ச்சிக்குப் பூசணியையும்பிறவிப்பயனுக்கு வாழையையும்சமாதிநிலை இன்பத்திற்கு மாம்பழத்தையும்கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டிற்குத் திப்பிலியையும்மாம்பழத்தை சுகத்துக்கங்களுக்கும்தன் மனைவிக்கு வீட்டில் விளையும் மாம்பழத்தையும்பலாப்பழத்தையும்மாற்றான் மனைவிக்குப் புளியம் பழத்தையும்ஈச்சம் பழத்தையும் ஒப்பிட்டு மறைபொருளாகக் கூறியுள்ளார்.
வேள்வி வளர்க்கும் குச்சியாகவும் (சமித்து)நியதி உடையவர்களுக்கு ஒப்பாகவும் - ஆல்,அரசுஅத்தி தாவரங்களையும்
பூசைக்குரிய புனித பொருளாக - மஞ்சள்தர்ப்பை
வழிபாட்டு தாவரமாக - நெல்அருகம் புல்
தூப வழிபாட்டு பொருட்கள் - சந்தனம்அகில்குங்குமம்கற்பூரம்
வழிபாட்டு சாந்து - சந்தனம்கற்பூரம்குங்குமம்
தாவரத்தால் பெயர் பெற்ற ஊர்கள் - ஆலம்தில்லைதேவதாரு
இறைவனின் முகத்தோற்றும் - குங்கும்செவ்வரத்தைதாமரை தாவரங்களை கூறுவதுடன்
சிவலிங்கம் - அரசமரம்வில்வ மரம்அரிசிஅரிசி அன்னம்
அத்தி       - மரம்-ஆதார எலும்பிற்கும்பக்குவப்பட்ட நிலைக்கும்;
                                    அத்திப் பழத்தை - வினைபயன்;  அத்தி விதை - கருமுட்டை
அரசமரம்   - சிவலிங்கம்
ஆம்பல்     - அறியாமை
ஆலம்      - விதை - உயிர் அணுநிற்குண பிரம்மம்காய் - குண்டாலம்
எட்டி       - முதுமைபொதுமகளிர்சமாதி நிலைஅறம் செய்யாதவர்கள் போல்                  தோற்றம்உலக இன்பத்தால் ஏற்படும் துன்பம்
எள்         - அளவையும்கால அளவை குறிக்க
ஏலம்       - ஏழு ஆதாரங்கள்
கரும்பு      - இளமைசாறு - உருவத்தோற்றம்
கமுகு      - அமுது
கல்ஆல்     - உபதேசத்திற்கு ஏற்ற இடம்
களா        - பெண்களின் சாந்து பொட்டு
கற்பூரம்     - தோன்றி மறையும் மனித வாழ்வு
கிஞ்சுகம்    - வாயிதழ்
குமட்டி பழம்- ஆனந்தம்
குவளை     - கண்கள்
கொட்டி     - அறிவு
சூரை       - துன்பம்
தண்டலை   - இறைவியின் தோற்றப் பொலிவுக்கு
தாமரை     - இறைவனின் முகம்கால்கண்கைநிறம்பிராணவாயு தலையில்
நிறுத்துமிடத்தைக் குறிக்கவும்உறைவிடம்உலக இயக்கம்உயிர்மூச்சு,மூலாதாரம்கொப்பூழ்மேல்வயிறுநெஞ்சுதொண்டைக்குழிபுருவநடு,நாதவிந்துஉணர்வுகள்அண்ட வெளி பொருட்கள்வண்ணத்திற்கும்,கருவிலிருந்து வெளிவரும் பாதம்.
தில்லை     - கூத்துவனம் - வாழ்விடம்
தென்னை   - குரும்பை - இறைவியின் கொங்கைக்கு,  இளநீர் - படையற் பொருள்,
நாவல்      - அபானனும் பிராணனும்கூடுகின்ற நிலை
நெய்தல்    - சிவபெருமானின் ஐந்துவித ஆற்றலுக்கு ஒப்பிட்டுள்ளார்.
நெருஞ்சில்  - நெறி தவறிய வாழ்க்கை
நெல்                   - வளர்ச்சி - காய சத்தி அடையும் வழிவழிபாடுஅரிசியும்அரிசி சோறும்
                                      வழிபாடும் சிவலிங்கம்.
நெல்லி     - தவநெறி வெளிப்பாடு,
பஞ்சு       - இறைவனின் ஒளி,
பருத்தி      - பரஞ்சோதி சுடர்வழிபாட்டின் உச்ச நிலை
பனை       - வைராக்கியத்திற்கான முதுகு தண்டுவீடுபேற்றுபனை ஓலையை 
              மந்திர ஒலையாக குறிப்பிடுகின்றார்.
பாங்கர்     - சிரசில் ஏற்படும் ஒளியை பாங்கர் மலருக்கு ஒப்பிட்டுள்ளார்.
பாசி        - தெளிவற்ற மனநிலைமயக்க உறவுகள்
பிரம்பு      - யோகிக்கு அடையாளம் (யோக தண்டம்)
புளி         - புளியம் பழம் ஓடு - பற்றற்ற நிலைக்குபார்த்ததும் எச்சில் ஊறுவது
புன்னை     - சிவகதி
பொற்பூவை - இறைவியின் தோற்றம்
மஞ்சள்     - சமாதி அமைக்க
மா         - தளிர் - சிவ ஒளிமாம்பழம் - தவத்தின் வெற்றி,
மிளகு       - அனைத்து வியாதிகளுக்கும் ஒரே தாவரமாக மிளகை குறிப்பிட்டுள்ளார்.
முஞ்சில்    - சமாதிக்காக அமைக்கப்படும் நில அறைநாணலின் அழிவற்ற                           தன்மையைப் பிரணவமந்திரத்தால் உடல் அழியாத தன்மையை                         ஒப்பிடுகின்றார்.
மூங்கிலை  - மூங்கிலின் முளைக்குருத்து - மணதிற்கும்முக்கலைகளுக்கும்
வஞ்சி      - இறைவியின் மென்மையான உடல்
வன்னி      - சுடர்அக்னிதேவன்நெருப்புவேள்வித்தீமந்திர எழுத்து
வாழை     - இன்பம்அமுதம்அழியாத் தன்மை
வில்வம்    - சிவலிங்கம்சமாதிக்கு
விளா       - மனித உடல்
வேம்பு      - வைராக்கியம்பொது மகளிர் உடல்உயிர் நாடிசத்து சித்து.
வேய்       - இறைவியின் வளைந்தத் தோள்
இவ்வாறு மனித வாழ்க்கையும்இறைவழிபாட்டையும்யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86தாவரங்களைப் பதிவு செய்திருக்கின்றார்.

இவ்வாறு பதிவு செய்துள்ள தாவரங்களை அடையாளம் கண்டுஅதை அடையாளம் காட்டும் பணி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன்ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம்வகைப்பாடுதாவரம் இடம் பெற்ற பாடலடிகள்தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியனவும் இந்நூலில் விரிவாகவும்விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன.





இரா. பஞ்சவர்ணம்


05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் நூலை கடலூர் மாவட்ட  ஆட்சித் தலைவர் 
திரு s.சுரேஷ்குமார் IAS அவர்கள் வெளியிட 
நெய்வேலி பழுப்பு  நிலக்கரி நிறுவன நிதித்துறை இயக்குநர் 
திரு. S. சந்திரசேகரர் பெற்றுக்கொண்டார்.


திருமந்திரம்
05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் 
இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு கடலூர் மாவட்ட  ஆட்சித் தலைவர் 
திரு s.சுரேஷ்குமார் IAS அவர்கள்  பாராட்டு கேடயம் (Shield) வழங்குகின்றார்.
இரா. பஞ்சவர்ணம்
05-07-2015 அன்று நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட பாராட்டு கேடயம் (Shield).